அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி
#SriLanka
#Death
#Accident
#Anuradapura
Prathees
2 years ago
அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியின் எரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் கஹ்தகஸ்திகிலிய, கிரலாகல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
மக்காவுக்கான புனித யாத்திரைக்கான விமானப் பயணச்சீட்டுகளை தயாரித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.