மகாவலி திட்டத்தை விடவும் மிக மோசமான திட்டம்! அமைச்சரவையில் அனுமதி
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
Mayoorikka
2 years ago
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பிலிருந்து நேரடியாக கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்றுக்கு அமைச்சரவையில், அனுமதி பெறப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது குறித்த விடயம் தொடர்பில் ஒரு சில புத்தி ஜீவிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச சட்டம் மகாவலி திட்டத்தை விடவும் மிக மோசமான முறையில் அமைந்திருக்கும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.