பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை - 20 பேர் பலி

#China #Death #Flood #HeavyRain
Prasu
2 years ago
பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை - 20 பேர் பலி

சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. 

அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தப் புயலால் 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுமார் 6,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. 

இதனால் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக சீனாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் 27 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

பீஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!