யாழ்ப்பாணத்தில் அங்காடி மீது தாக்குதல் : உரிமையாளர் காயம்
#SriLanka
#Jaffna
#Attack
#Lanka4
#இலங்கை
#தாக்குதல்
#லங்கா4
#யாழ்ப்பாணம்
#shop
Mugunthan Mugunthan
2 years ago
யாழ். கல்வியங்காடு பகுதியில் உள்ள அங்காடியொன்றிற்குள் நேற்று புதன்கிழமை புகுந்த வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி கடை உரிமையாளரையும் காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தெரியவருவதாவது, நேற்றிரவு மூவர் அடங்கிய வன்முறை கும்பலொன்று குறித்த கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி, சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி, கடை உரிமையாளரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில் அங்காடி உரிமையாளருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டதாக அவர்களது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறினர்.