விமல் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
#India
#Cinema
#TamilCinema
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விமல், தனது உண்மையான நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலத்தை தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக வேலு தாஸ் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் 'துடிக்கும் கரங்கள்'. இப்படத்தில் மிஷா நரங், சதீஷ், சௌந்தர ராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.



