ஆதி, ஹன்சிகா நடித்துள்ள 'பாட்னர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
#India
#Cinema
#TamilCinema
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago

அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன் இயக்கத்தில், ஆதியுடன் நடித்துள்ள திரைப்படம் 'பாட்னர்'. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவிமரியா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ராயல் பர்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



