மன்னாரில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு சென்ற 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு
#SriLanka
#Mannar
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
2 years ago
மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று வியாழக்கிழமை(3) காலை மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மை தெரிய வந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
