தைவானில் 40இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து: மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
வடக்கு தைவானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 40இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கானுன் சூறாவளி காரணமாக பாடசாலைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சூறாவளியானது மணிக்கு 198 kph (123 mph) வேகத்தில் அதன் வடகிழக்கு கடற்கரையை நோக்கி மெதுவாகச் நகரும் என அந்நாட்டு வானிலை நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால் கடும் மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணாக தலைநகர் தைபே உட்பட வடக்கு நகரங்களில் வணிகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. தைவானின் பங்குச் சந்தைகள் மற்றும் அந்நியச் செலாவணி சந்தைகளும் மூடப்பட்டன.
மேலும் 40 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அனைத்து உள்நாட்டு படகு பாதைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.