பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு: 10 பேர் படுகாயம்
#SriLanka
#Death
#Accident
#Hospital
Mayoorikka
2 years ago
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் பரவூர்தி ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.