அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம்!
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
#Ranil wickremesinghe
#pressmeet
Mayoorikka
2 years ago
பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கே தலைவரொழிய சஜித் பிரேமதாசா எனக்கு தலைவர் அல்ல -என்றார்.