இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயினுடன் இலங்கையர் ஒருவர் கைது

#SriLanka #Arrest #Pakistan #drugs
Prathees
2 years ago
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயினுடன் இலங்கையர் ஒருவர் கைது

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பையை சோதனை செய்ததில், பையில் 10.294 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. 

 பின்னர், சந்தேகத்தின் பேரில் இலங்கை பிரஜையை அதிகாரிகள் கைது செய்தனர்.

 சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார், 

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!