'போர் தொழில்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
#India
#Cinema
#Actor
#TamilCinema
#release
#Tamilnews
Mani
2 years ago
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார் மற்றும் நிகிலா விமல் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர்.
அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க, கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, இதன் ஒடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, 'போர் தொழில்' வரும் 11ம் தேதி முதல் சோனி OTT தளத்தில் வெளியாக உள்ளது.