முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது!

#SriLanka #prices #Lanka4 #petrol
Kanimoli
2 years ago
முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது!

முச்சக்கர வண்டிக் கட்டணங்கள், ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

 ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்றிரவு (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

 ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!