பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

#Death #world_news #Pakistan #Lanka4 #BombBlast
Kanimoli
2 years ago
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பஜூர்கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். மேலும் அந்த இடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தற்கொலை படை தாக்குதல் இதனையடுத்து அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அவர்கள் குண்டுவெடிப்பு நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். 

இதில் மர்ம நபர் ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை படையாக செயல்பட்டது தெரிய வந்தது இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 40 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. தலைவர்கள் இரங்கல் இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 பேர் உயிரிழந்தனர். 

இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது. இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதில் உயிரிழந்தவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஆரிப் ஆல்வி, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அதிபர் ஆரிப் ஆல்வி வலியுறுத்தினார். 

இந்த மாநாட்டை நடத்திய ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சி, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ப்பின்போது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரகுமான் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை வலியுறுத்தி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4