மற்றுமொரு பிக்குவின் மோசமான செயல் அம்பலம்!
#SriLanka
#Arrest
#Lanka4
Thamilini
2 years ago
காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விஹாராதிபதியை எதிர்வரும் 08 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரான விஹாராதிபதி சிறுமியை விகாரைக்கு அருகில் உள்ள வீட்டின் அறைக்குள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வன்புணர்வுக்கு உள்ளான குறித்த சிறுமி கராப்பிட்டிய வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.