சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா மூலம் அனுப்பும் 7வது குழு

#America #NASA #Tamilnews #Scientist #Rocket #Space
Mani
2 years ago
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா மூலம் அனுப்பும் 7வது குழு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்துள்ளது. அந்தவகையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது.

இந்த குழுவினர் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் 7வது குழு இதுவாகும்.

குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொக்பெலி, ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்யாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் விண்வெளி வீரர்கள் செல்கின்றனர். இவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந் தேதி தங்களது பணியை தொடங்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4