கடந்த இருமாதங்களில் துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35000 பேர் கைது

#Arrest #government #Refugee #Turkey
Prasu
2 years ago
கடந்த இருமாதங்களில் துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35000 பேர் கைது

துருக்கிக்கு அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுப்பது சிக்கலான ஒன்றாக உள்ளது.

 அந்தவகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 ஆயிரத்து 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தற்போது சட்ட விரோதமாக குடியேற்றத்தை தடுக்க அங்குள்ள கடற்கரையில் சுற்றுலா படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் இஸ்தான்புல் நகரில் நிறுவப்பட்டுள்ளது. 

அங்கு புலம்பெயர்ந்தோரின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 39 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!