பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த 05 அமைப்புகளின் மீதான தடை நீக்கம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த 05 அமைப்புகளின் மீதான தடை நீக்கம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 05 அமைப்புகளின் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.  

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் நலன் கருதி, 11 அமைப்புகள்  கடந்த  2021 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தடை செய்யப்பட்டன. 

ஐக்கிய தௌஹித் ஜமாத், சிலோன் தௌஹித் ஜமாத், ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாத், அகில லங்கா தௌஹித் ஜமாத், ஜம்மியத்துல் அன்சாரி சுன்னத்துல் முகம்மதியா ஆகிய அமைப்புகளே இவ்வாறு தடை செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில், இந்த அமைப்புகள் மீதான தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!