உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

#SriLanka #Court Order #Ali Sabri #Easter Sunday Attack #Lanka4 #L4
Prasu
1 hour ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்து அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அலி சப்ரி, இந்தத் தீர்ப்பை “சட்ட ஆட்சியின் வீழ்ச்சி” என விமர்சித்துள்ளார். 

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

சிலர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி கிடைத்துள்ளதாகக் கருதும் நிலையில், அந்தத் தீர்ப்பை ஏன் விமர்சிக்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மற்றொரு தரப்பினர், நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து விமர்சனக் கருத்து வெளியிடுவது ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியாகும் என்றும் வாதிடுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் பலரிடமும் தொடர்கிறது. 

இந்த நிலையில் வெளியாகும் ஒவ்வொரு கருத்தும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4