வைத்தியர் ஆலோசனை சர்க்கரை வியாதிக்காரர் வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆம். இல்லை.

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #plantain
வைத்தியர் ஆலோசனை சர்க்கரை வியாதிக்காரர் வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆம். இல்லை.

முக்கனிகளில் ஒன்றாகவுள்ள பழமான வாழைப்பழம், பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் பழத்தை ஏழைகளின் பழம் என்றும் செல்லுவார்கள்.

 இதில் மிக அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி டிரைப்டோபெனாக மாற்றப்பட்டு டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.

 இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ.பி.பி2, சி, பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளது.

 நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் நல்லதா?

 வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கிறது.

 இது டைப் 2 நீரிழிவுவைத் தடுக்கிறது. வாழைப்பழத்தில் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் குறியீடு 50 ஆகஉள்ளதால் இது இரத்த சக்கரையின் நுகர்வின் அதிகரிப்பின் அளவைத் தடுக்கிறது.

 வாழைப்பழத்தில் சக்கரை அளவினை நார்ச்சத்து உணவுகள் மழுங்கடிக்கச் செய்கின்றது. அதனால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தினை சாப்பிடுவது நல்லது.

 பச்சை நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பச்சை நிற வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.

 வாழைப்பழம் இன்சுலின் செயல்பாட்டினை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

 கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதற்கான டயட்டை பின்பற்றும் நபர்கள் மட்டும் வாழைப்பழத்தை தவிர்த்து விடலாம்.