பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

#Death #Suicide #Attack #Pakistan #Bomb
Prasu
2 years ago
பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்நத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான்-கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மசூதி ஒன்றில் இரு பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் பயங்கரவாதிகளை கைது செய்ய முயன்றனர். இதன்போது குறித்த இரு பயங்கரவாதிகளில் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்தார். இந்த தற்கொலை குண்டு தாக்குதலின்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதேவேளை, தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றைய பயங்கரவாதி தப்பிக்க முயன்ற வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!