இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் அமெரிக்காவில் அரிசி விலையதிகரிப்பு

#India #rice #prices #world_news #Lanka4
இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்ததால் அமெரிக்காவில் அரிசி விலையதிகரிப்பு

கடந்த வாரம் இந்திய மத்திய அரசு, பாஸ்மதியில்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

 இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

கடந்த ஒருவாரமாக அமெரிக்காவில் அரிசிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அங்கு அரிசி விலை உயர்ந்து வருகிறது. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

உலகில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை இந்தியா வழங்குகிறது. இங்கிருந்து 140 நாடுகளுக்கு அரிசியானது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4