பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

#India #France #D K Modi
Prasu
2 years ago
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். 

தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர். 

இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

 இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். மேலும் அதிபரின் மனைவிக்கு போச்சம்பள்ளி பட்டும், அந்நாட்டு பாராளுமன்ற தலைவருக்கு காஷ்மீரின் கார்ப்பெட்டும், செனட் தலைவருக்கு சந்தனத்தாலான யானைச் சிற்பத்தையும் பரிசளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4