உங்கள் பிள்ளைகளின் கல்வியில் வாஸ்துவின் பங்கு

#children #spiritual #ஆன்மீகம் #education
Mugunthan Mugunthan
9 months ago
உங்கள் பிள்ளைகளின் கல்வியில் வாஸ்துவின் பங்கு

ஒரு வீட்டில் வசித்துவரும் குடும்பத்தில் பெற்றோர் விரும்புவது தம் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கி, நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதுதான்.

பொதுவாகவே நாம் வீடு கட்டும் போதோ அல்லது நிலத்தினை வாங்கும் போதோ, வியாபாரம் செய்ய தான் வாஸ்துக்களை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். 

 அது போன்று தான் பிள்ளைகளின் படிப்பிலும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து குறிப்பினால் பிள்ளையை எப்படி படிக்க வைக்க முடியும்?

குழந்தைகளின் படிப்பு சார்ந்த குறைபாடுகளை போக்க, வாஸ்து குறிப்புகள் மற்றும் சாஸ்திரங்கள் மிக எளிய தீர்வுகளை அளிக்கின்றன.

*படிக்கும் அறை வடக்கு அல்லது மேற்கு பக்கம் நோக்கி இருக்க வேண்டும். 

*படிக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு புறம் பார்த்து அமர்ந்து படிக்க வேண்டும். 

*அறையில் நீலம் அல்லது பச்சை நிறங்களை பெயின்ட் அடிப்பது.

*குழந்தையின் கழிவு அறை கதவு வட கிழக்கு திசையை நோக்கியதாக இருக்க வேண்டும். 

*பிள்ளையின் அறையிலுள்ள கண்ணாடிகள் இரவில் மறைக்கப்படுதல் அவசியம்.

*படிக்கும் மேஜை சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. திறந்த வெளியாக இருக்குமாறு அமைத்து அதன் முன்னதாக குழந்தைக்கு பிடித்தமான விஷயம் மற்றும் அவர்களின் ஆர்வத்தினை தூண்டக்கூடிய பொருட்களை வைக்க வேண்டும். 

*பிள்ளை அமர்ந்து படிக்கும் இடத்திற்கு உடனடி பின்னணியில் கதவு இருத்தல் கூடாது.

*தன்னம்பிக்கை ஆர்வத்தை தூண்டக்கூடிய படங்கள், வாக்கியங்கள் கொண்ட போஸ்டர்களை அவர்களின் அறையில் ஆங்காங்கே ஒட்டி வைக்கலாம். *மேஜை சுத்தமாக இருக்க வேண்டும்.

*புத்தகங்களை மேஜை முழுக்க குவித்து வைத்திருக்கக்கூடாது. 

*கண்ணை உறுத்தாத வெளிச்சம் தரும் விளக்குகளை அறையில் அமைக்க வேண்டும்.

*பிள்ளைகளின் எந்தவொரு பொருளையும் அவர்கள் அனுமதி இல்லாமல் தொட வேண்டாம்.

*அவர்களின் புத்தகங்களை அடுக்குவது போன்ற விஷயங்களையும் கூட பிள்ளைகளின் அனுமதி பெற்ற பின் செய்வது சிறந்தது. 

*படிப்பை விருத்தியடைய செய்யும் மந்திரங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். 

*கழுகின் சிலையை தென்மேற்கு திசையில், உங்களது வீட்டில் வைப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கல்வியில் கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.

இக்காரணிகளினை நாம் கையாண்டு பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனமும் படித்தவை நல்ல ஞாபகத்தில் இருக்கவும் அதனை சிறந்த முறையில் பிரயோகிக்கவும் செய்ய முடியும்.