சொய்சாபுர பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
சொய்சாபுர பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழப்பு!

நுவரெலிய மாவட்டம் - சொய்சாபுர பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (ஜுலை 08) நடைபெற்ற குறித்த சம்பவத்தில் 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அந்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், அந்த நேரத்தில் உறவினர் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

சடலங்கள் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!