ஈழ தமிழர்களை ஆளப்போவது சீமானா? சின்ன மோடி அண்ணாமலையா? (கட்டுரை)

#SriLanka #Article #D K Modi #Lanka4 #annamalai
Kanimoli
10 months ago
ஈழ தமிழர்களை ஆளப்போவது சீமானா? சின்ன மோடி அண்ணாமலையா? (கட்டுரை)

2009 இற்க்கு பிற்பாடான காலங்களில் தொடக்கம் ஈழ தமிழ் மக்கள் ஒரு சரியான உண்மையான தலைமை இல்லாமல் கண்டவன் நின்றவன் எல்லாம் நான் தான் தலைவன் என கூச்சமில்லாமல் கண்டபடி கபடி ஆடுவதை பார்க்ககூடியதாக உள்ளது. இலங்கையில் ஆட்சி மாறும்பொழுதில் ஒவ்வொரு தமிழர்களின் கொள்கைகளும் மாற்றப்படுகின்றது. அதனால் கட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் தொண்டரும் ஆதரவாளர்களும் மூளை சலவை செய்து மாற்றப்படுகின்றனர். அவர்களும் தொடர்களாக இருப்பதே தமது சலுகைகளைபெற வேண்டும் என்பதால் மாறித்தான் தீரவேண்டும். 

 நடைமுறைக்கு இக்கால இலங்கையில் கொண்டுவர முடியாத சில கொள்கைகளை தமது குறிப்பிட்ட ஒரு சிலரின் வாக்குக்களை தக்க வைக்க சிலரும், வெளி நாட்டில் வாழும் மற்றும் சேர்க்கப்படும் பணத்தை தக்க வைக்கவும், சில வெளி நாட்டு முதலீட்டாளர்களின் தொடர்பை தொடர்ந்து பேணவும் மக்களையும் தொண்டரையும் எழுச்சிப்படுத்தி தமது இருப்பை அறப்போகும் கயிற்றில் ஓடத்தை நடுக்கடலில் கட்டி வைத்தது போன்ற கொள்கையை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

 இவர்களால் இலங்கையிலே வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒன்றும் ஆகாது என்றாலும் இலங்கையில் தமிழ் இனம் இப்பொழுதும் இருக்கிறார்கள் என்ற அதிர்வை ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுகளில் காணக்கூடியதாக உள்ளது. அதற்காகவாவது இவர்களும் இலங்கைக்கும் தமிழ் மக்களுக்கும் தேவையாக இருக்கிறார்கள். இ ந் நிலையை கண்ட சில இந்திய கட்சிகள் தாம் ஈழ மக்களுக்குள் புகுந்து தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களின் வாக்குக்களை அபகரிக்க யாழ்ப்பாணம் உட்பட இலங்கை பூராகவும் பாய் விரித்து விருந்தோம்ப அழையா விருந்தாளியாக புகுந்திருக்கிறார்கள்.

 அதில் 2009 இற்க்கு பிற்பாடு பல ஈழ தமிழ் ஆதரவு கட்சிகள் முளைத்ததும் ஈழ மக்கள் அனுஷ்டிக்காத தினங்களைகூட தாம் அனுஷ்டித்து சிங்கள மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் ஒரு துவேச அலையை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சீமான் செய்வது சரியா தவறா என விவாதிக்க முடியாத அளவிற்கு அவரது பிரச்சாரம் உலக நாடுகளிடையே சிலரின் இதயத்தில் கோவில் கட்டி வணங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய தமிழகத்தில் தமது இருப்பை தக்க வைக்க பாரத ஜனதா கட்சி தனது பலத்தை தாண்டி அங்கு இருக்கும் மக்களால் ஏற்கப்பட்ட, ஏற்கப்படாத பிரமுகர்களை தனது குடையின் கீழ் படை திரட்டுகிறது. இவர்கள் கையில் மத்திய அரசின் கடிவாளம் கையில் இருப்பதால் கடிவாளத்துக்குள் அடங்காதவர்களை தனது பிரமாஸ்திரமான சட்ட ஓட்டைகளையும் ஊழல் நச்சு நாசினியையும் வீசி வீழ்த்துகிறது.

 இவர்களின் நடவடிக்கைக்கு மேலும் வலு சேர்க்க தமிழ் நாட்டில் ஒரு ஈழ அலையை ஏற்படுத்த முனைந்து அதன் பெறுபேறு பாதகமாக இருந்ததால் தாடி வைக்காத மோடியாக வலம் வரும் அண்ணாமலையாரை அனுமானும் ராமரும் இணைந்த பாலத்தோடு ஈழ நெருப்பு செம்பூமியில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவரின் அணுகு முறையால் ஈழ மக்கள் குறிப்பாக யாழில் அவர் கண்ணுக்குள் அகப்படாவிட்டாலும் அண்ணாமலையை அட்டவணை போட்டு இயக்கும் இந்திய உளவுப்படையான றோவிடமும் அவர்களின் கடைக்கண் பார்வைக்குள்ளும் சலுகைக்கும் கழுத்தில் இந்திய சலுகைகளைக் கட்டியுள்ள மாடுகள் தலை அசைத்து வாலாட்டிவதுபோல யாழ்ப்பாண முதலைகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்து செயலாற்றுகின்றனர். எதற்காக பாரதிக ஜனதாவிற்கு ஈழ அணுசரணை என்று பார்த்தால் அவர்கள் பிடிக்கப்போகும் திமிங்கிலம் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆசனம். 

அதற்கு தூண்டிலில் போடவேண்டிய சிறிய மீன் ஈழ ஆதரவு தமிழக வாக்குக்கள் ஈழத்தில் தமக்கு ஆதரவைப் பெற்றால் தமிழகத்தை கைப்பறுவது அவர்களுக்கு இலகுவாகும் என்பதால்தான் மோடி வரவேண்டிய அட்டவனையில் அண்ணாமலையாரை அனுப்பியது மோடி தரப்பு. இதில் போட்டி சீமானுக்கும் அண்ணாமலைக்கும் என்பது வெளிப்படையாக இருந்தாலும். இரு தரப்பையும் ஈழ உலகத் தமிழர்கள் பார்ப்பது மிருக காட்சிசாலையில் பயிற்றுவிக்கப்பட்டு பார்வையாளர்களிடையே கட்டப்படாத சிங்கமும் புலியுமாகத்தான் பார்க்கிறார்கள். இவர்களால் எப்பொழுதும் பார்வையாளர்களை தாக்கலாம் என்ற அச்சம் உள்ளது. அவர்கள் தமது அரசியல் பசிக்கு ஈழ மக்களை இரையாக்குவார்கள் என்பதும் நாம் நடந்து வந்த பாதை இடுக்கில் குத்திய முட்களின் நோக்கள், காயங்கள் கூறுகின்றன.

 இவர்களால் ஆளும் இந்தியா யாழ்ப்பாணத்தை இந்திய கடல் கோதுவதுபோல மக்களின் முடிவுகளையும் சில நகர்வுகளையும் அரித்துக்கொண்டு இருப்பதை காணலாம். இது திரை மறைவில் கிழக்கிலும் புலனாய்வூடாகவும் இலங்கையில் உள்ள இந்திய கூலிப்படைகள் ஊடாகவும் நகர்ந்து தென்னிலங்கையிலும் பதிந்துள்ளது. இப்பாதையில் இந்திய உளவாளிகள் மட்டுமல்ல அரபு நாட்டு உளவாளிகள், ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஆபிரிக்கா என பலர்வற்றும் குளத்தில் மீனுக்காக காத்திருக்கும் கழுகாக இலங்கை பொருளாதார வறட்சி வானில் பறக்கின்றன. நாம் தெரிந்தோ தெரியாமலோ உலக பொருளாதார வலைக்குள் சிக்கியுள்ளோம். இப்படியே போனால் யாழ் மட்டுமல்ல முழு இலங்கையையும் ஒரு பெரிய வல்லரசு விழுங்கப்போவது நிச்சயம். அதற்கு பெரிய அளவிலான சாதகம் இந்தியாவுக்கே உண்டு. 

 இதை இலங்கை மக்கள் உணர்ந்து அவர்களுக்கு கொடுக்கும் உரிமைகளை மட்டுப்படுத்தி எமது உரிமைகளை நாம் பாதுகாக்க தவறுவோமேயானால் அனைத்தும் பறிபோகும். மீண்டும் ஆயுதம் ஏந்த இந்தியா தானே திரைமறைவில் அனுமதித்து குழப்பம் உண்டாக்கி தானே தன் கைக்குள் வைத்து பொம்மலாட்டம் காட்டுவது நிச்சயம். நாம் சிறிய நாடு, சிறிய இனம் எனவே நான்கு மத சார்பான அனைத்து உலக நாடுகளின் உதவி, அனுசரணை, ஆலோசனை இல்லாமல் வாழ இயலாது. ஆனால் நாம் எம்மை ஆழ வேண்டும். அதற்க்கு எமக்குள் ஒற்றுமை வேண்டும். 

 அடுத்ததாக நாட்டின் அரசியல் வியாபாரத்துக்குள்ளோ பொறிக்குள்ளோ அகப்படாமல் வாழ முனையவேண்டும். இதற்கு நாம் எமது சந்ததியை கல்விமான்களாக்கி உலகில் பரப்பி உலகமே எம்மை ஆலோசனை கேட்கும் அளவிற்கு ஏற்படுத்தவேண்டும். அன்பான எம் இலங்கை உறவுகளே எதிரிதைகூட எமக்கு பலம் வரும்பொழுது தாக்கவேண்டும். நான் எதிரியை விட பலசாலி ஆனாலே போதும் அவன் தோற்றுவிடுவான். ஒற்றுமையும் கல்வியும் எம் இலங்கைக்கு இப்பொழுது முக்கியம். வரும் சந்ததிக்கு நல்ல விதைகளைக் கொடுப்போம். அது விருட்சமாகும்.

-செல்வா சுவிஸ்-