உள்நாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளுக்கு பரிசுகளோ பணமோ கிடையாது

#SriLanka #Police
Prathees
2 years ago
உள்நாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளுக்கு பரிசுகளோ பணமோ கிடையாது

நாட்டில் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தகவலறிந்தவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகையை அதிகரிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையுடன் வெளியிடப்பட்ட ஆவணம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு செல்லுபடியாகாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளுக்கு மாத்திரமே பணப்பரிசு வழங்குவதற்கான தீர்மானம் செல்லுபடியாகும்.

 சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் விதம் தொடர்பிலான அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!