இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாணத் தமிழர் நியமனம்!
#SriLanka
#Red Cross
#Lanka4
#President
Kanimoli
2 years ago
உலகமெல்லாம் எங்கே உதவிகள் தேவையோ அங்கே எல்லாம் உயிரை பணயம் வைத்து தமது அரிய சேவைகளை வழங்கும் பொது நிறுவனங்களில் பழைமை வாய்ந்ததும், அதிகம் உதவிகளை செய்யும் நிறுவனமே உலக செஞ்சிலுவை சங்கம் ஆகும்.
அந்த வகையில் இலங்கையில் பல வருடமாக இயங்கிவரும் இப்பொது நிறுவனத்தின் அங்கத்தவர்கள் தேர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக முதன் முறையாக ஒரு யாழ்ப்பாண தமிழர் தேர்வு செய்ய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண கிளையின் தலைவராக பணியாற்றிய கு. பாலகிருஷ்ணன் வயது 80 ஐ உடைய ஒரு முதுமாணிப் பட்டதாரி ஆவார்..
இவரை இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை மும்மொழியிலும் விரைவில் லங்கா4 ஊடகம் வெளியிடும் என்பதையும் அறியத் தருகிறோம்.
