சீனாவின் உணவகமொன்றில் தீ விபத்து : 31 பேர் உயிரிழந்துள்ளனர்

#China #world_news #Hotel #Lanka4 #சீனா #தீ_விபத்து #fire #லங்கா4
சீனாவின் உணவகமொன்றில் தீ விபத்து : 31 பேர் உயிரிழந்துள்ளனர்

சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 31 பேர் பலியாகியுள்ளனர்.

 டிராகன் படகு திருவிழா ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்களுக்கு பொது விடுமுறை அளிக்கபட்டிருந்தது.

 விடுமுறையை தொடர்ந்து மின்சுவான் நகரில் உள்ள பிரபல பார்பிக்யூ உணவகத்தில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 அந்த சமயத்தில் உணவகத்தின் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு உணவகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

 தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4