மகனை திருத்த மேற்கொண்ட நாடகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தாய்
#India
#Death
#Suicide
Prasu
2 years ago

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியை. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. பலமுறை கண்டித்தும் பள்ளிக்கு சரியாக செல்வதில்லையாம்.
இதனால் மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டி உள்ளார். அத்துடன் மகன் கண் எதிரிலேயே தூக்கு மாட்டியுள்ளார். ஆனால் இதை மகன் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டான்.
ஆனால், தூக்கு மாட்டிய கிருஷ்ணவேணி அதில் இருந்து விடுபட முயன்றபோது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



