திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

#Temple #Festival #கோவில் #அம்மன்
Mani
2 years ago
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது

மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.     

மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4