அறுவை சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார் மருத்துவமனை அறிக்கை!

#Tamil Nadu #Hospital #Attack #Minister #Tamilnews #Breakingnews #ChiefMinister
Mani
2 years ago
அறுவை சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார் மருத்துவமனை அறிக்கை!

நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம் அடைப்புகள் நீக்கப்பட வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்திய நிலையில், இன்று அதிகாலை செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சைத் தொடர்பாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘’ அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை மூத்த இருதயவியல் நிபுணர் ரகுராம் தலைமையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வாயிலாக இருதயத்தில் ஏற்பட்டுள்ள 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மூத்த இருதயவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு மூன்று அடைப்புகள் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் 4 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4