வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் வெள்ளம்!

#Rain #Flood #HeavyRain #Tamilnews #Breakingnews #Chennai
Mani
2 years ago
வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் வெள்ளம்!

சென்னையில் ஒரு நாள் பெய்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த முறை மாநகராட்சி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருந்த போதிலும், வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காலை 8 மணி வரை பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உபரி நீர் பெருக்கெடுத்து சுரங்கப்பாதையில் தேங்கியது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டன.

இரு சக்கரங்கள், கார்கள், லாரிகள், ஆட்டோக்கள், பேருந்துகள் கொண்ட எந்த வகை வாகனங்களும் சுரங்கப்பாதை வழியாகச் செல்ல முடியாது. மோட்டார் பம்ப் செட் மூலம் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றும் பணியை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடைபட்டதால், மக்கள் பெரம்பூர், பேசின்பாலம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4