கொலன்னாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு

PriyaRam
2 years ago
கொலன்னாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு

கொலன்னாவ - கொதடுவ வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (18) இரவு 8.40 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜா என்று அழைக்கப்படும் கிஹான் மதுஷங்க என்ற 41 வயதான நபரொருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு - பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!