இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

#SriLanka #Attack
Mayoorikka
2 years ago
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின்  வீட்டின் மீது தாக்குதல்!

பமுனுவிலவில் அமைந்துள்ள கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீட்டை சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த தாக்குதலினால் வீட்டின் எட்டு ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தாக்குதல் நடந்த போது வீட்டில் யாரும் இல்லை. இராஜாங்க அமைச்சரின் வீட்டை தாக்கியவர்கள் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை கைது செய்ய சபுகஸ்கந்த பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதனைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்து சந்தேக நபர்களை அடையாளம் காணவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!