கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் 6 முறை நிலநடுக்கம் பதிவு

#India #Earthquake
Mani
2 years ago
கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் 6 முறை நிலநடுக்கம் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் பகுதியில் நேற்று பிற்பகல் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் ஆரம்ப நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் தோடா மாவட்டங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகி இரவு 9.44 மணிக்கு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்குப் பிறகு தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 8.28 மணியளவில் லடாக்கில் உள்ள லே பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. இது, லேயில் இருந்து 270 கி.மீ, வடகிழக்கே 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.

லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 2.16 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் பிற்பகல் 3.50 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மீண்டும் அதே அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4