அச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

PriyaRam
2 years ago
அச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் - மற்றைய குழுவின் நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரியவருகிறது. உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!