சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மனைவி கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில்

#SriLanka #Police #Accident #sri lanka tamil news
Prathees
2 years ago
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மனைவி கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மனைவி வாகன விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 அஜித் ரோஹனவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்து இடம்பெற்ற போது காரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இல்லை எனவும் மற்றைய காரின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து பித்தல சந்தி நோக்கி பயணித்த அவர் மின்சார சமிக்ஞை பலகைக்கு அருகில் நிறுத்தப்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 கடந்த 14ம் திக தி மதியம் 12:00 மணியளவில் பொலி டிரைவர் ஒருவர் காரை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!