ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

#India #Accident #Train #Breakingnews
Mani
2 years ago
ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவம் 288 நபர்களின் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில், ரயில் விபத்தில் பலத்த காயம் அடைந்த பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரைச் சேர்ந்த பிஜய் பஸ்வான், ஜூன் 13-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் விளைவாக, மொத்த இறப்பு எண்ணிக்கை 289 ஐ எட்டியது. மேலும், பீகாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 80 க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4