பிறந்த குழந்தைக்கு பிபோர்ஜோய் என்ற சூறாவளி பெயரை வைத்த பெற்றோர்

#India #Strom #Baby_Born #Gujarat
Prasu
2 years ago
பிறந்த குழந்தைக்கு பிபோர்ஜோய் என்ற சூறாவளி பெயரை வைத்த பெற்றோர்

இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களின் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைத்து மகிழ்ந்து வருகின்றனர். 

சுனாமி, சூறாவளி முதல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் பெயர்களிலும் இந்தியாவில் குழந்தைகள் உள்ளது என்றே கூறலாம். டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய சூறாவளி பெயர்களை தொடர்ந்து தற்போது பிபோர்ஜோய் பெயரும் இணைந்துள்ளது.

ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த முகாம்களில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு புயலின் பெயரான பிபோர்ஜோய் என பெயர் வைத்துள்ளனர். இது அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4