20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது

#SriLanka #Arrest #Police #Sexual Abuse
Prasu
2 years ago
20 வயதான யுவதியை பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் இந்த யுவதியின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த யுவதி தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த இந்த பொலிஸ் சார்ஜன்ட் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரிய வருகிறது. 

 யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!