ஜப்பானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பயணிகள் விமானம்

#Flight #Airport #Japan
Prasu
2 years ago
ஜப்பானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பயணிகள் விமானம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி கொண்டன. பாங்காக் நோக்கி சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர் நேஷனல் விமானமும், சீன தைபேவுக்கு புறப்பட்ட இ.வி.ஏ. ஏர்வேஸ் விமானமும் உரசி கொண்டன. 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, செய்தி வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலி காட்சிகளில் தாய் ஏர்வேஸ் விமான இறக்கையின் ஒரு பகுதி உடைந்திருப்பதையும், உடைந்த இறக்கையின் சில பகுதிகள் போன்று காட்சியளிக்கும் சில பொருட்கள் ரன்வே அருகே இருப்பதையும் காணமுடிகிறது.

 இதையடுத்து, விமான நிலையத்தில் ரன்வேக்கள் மூடப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!