நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி
#India
#Cinema
#Actress
#TamilCinema
#Hospital
#Minister
#Tamilnews
Mani
1 year ago

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளர்.
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தில் பிரஷாந்த்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரோஜா தொடர்ந்து ரஜினிகாந்த் விஜயகாந்த் சரத்குமார், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இதனிடையே நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



