ஹேரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு
#Jaffna
#Death
#drugs
#Injection
Prasu
2 years ago
ஹேரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.