ரகுல் பிரீத் சிங் படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது
#Cinema
#Actor
#Actress
#Movies
Mani
2 years ago

ரகுல் பிரீத் சிங் தற்போது 'இந்தியன்-2' மற்றும் 'அயலான்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார், மேலும் ஏராளமான இந்தி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் இந்தியில் ‘ஐ லவ் யூ’ என்ற படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது.நிகில் மகாஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவில் குலாட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
காதல் கலந்த திரில்லர் படமான 'ஐ லவ் யூ' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே பல திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன, இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



