கையடக்க தொலைபேசிகளின் விலையை குறைக்கத் தீர்மானம்
#SriLanka
#prices
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
கையடக்க தொலைபேசிகள் மற்றும் உதிரி பாகங்களின் விலையை 20% குறைக்கத் தயார் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இதன் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சமித்த செனரத் தெரிவித்தார்.
IPhone 14 Pro max வகை ஃபோனை 375,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் கடந்த காலத்தில் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரித்தால் கையடக்கத் தொலைபேசிகளின் விலை மீண்டும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.