வர்த்தக செயல்முறையை எளிதாக்குவதற்கு பிரேரணை தயாரிப்பதற்கு பணிப்பு!
#SriLanka
#Sri Lanka President
#Bussinessman
Mayoorikka
2 years ago
இலங்கையில் வர்த்தகம் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் தேசிய பிரேரணையை தயாரித்து முன்வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வர்த்தக வசதிக் குழுவின் (NTFC) முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இலங்கையில் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார்.
பூர்வாங்க நடவடிக்கையாக, தேசிய வர்த்தக வசதிகளை வழங்குவதற்கான செயலகத்தை நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடத்துவதற்கும் அதன் பணியாளர் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.