உலகிலேயே அதிகம் மாசுபட்ட நகரம் நியூயார்க் என்ன ஆய்வில் தகவல்!
#Newyork
#people
#world_news
#Tamilnews
#pollution
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
உலகிலேயே அதிகமாக மாசுபட்ட நகரம் நியூயார்க் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் காட்டுத் தீயால் படரும் புகையால் நியூயார்க் நகரம் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது.
புகைமூட்டம் நியுஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயார்க் நகரில் மாசு ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் மிகமோசமான காற்றுமாசு டெல்லியிலும் பாக்தாத்திலும் ஏற்படுவதாகக் கருதப்படும் நிலையில் நியூயார்க்கின் காற்று மாசு அதைவிடவும் மோசம் அடைந்தது.
தூசு, புகை மூட்டம் போன்றவை கிரேட் லேக்ஸ் பகுதியில் இருந்து வானம் முழுவதும் பரவியதால் நியூயார்க் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.