மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 6 மாணவர்கள் கைது
#SriLanka
#Arrest
#Police
#kandy
#Lanka4
Kanimoli
2 years ago
கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 6 மாணவர்கள் இன்று(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன், கணிதம் முதலாவது பகுதி வினாத்தாளை எழுதிய பின்னர் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விக்கெட்டினால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.