SLvsAFG - இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

#SriLanka #Afghanistan #Cricket
Prasu
2 years ago
SLvsAFG - இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 116 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில் துஷ்மந்த சமிர 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதன்படி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை இலங்கை அணியால் பெற முடிந்தது. 

பதும் நிஸ்ஸங்க 34 பந்துகளில் 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். 

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியது. 

 மீதமுள்ள பந்துகளின் எண்ணிக்கையில் (204) ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய ஒருநாள் தோல்வி இதுவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!